முகப்பு
தேனி

போடியில் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வேட்புமனுக்கள் ஏற்பு!

திமுக சார்பில் போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வேட்புமனுக்கள் ஏற்பு...

Updated On : 7 ஏப்ரல் 2026, 5:52 pm IST
முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் - கோப்புப் படம்
பகிர்:

போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை (ஏப். 6) நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று (ஏப். 7) காலை முதல் நடைபெற்று வருகிறது. எந்தெந்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மற்றும் நிராகரிக்கப்பட்டன ஆகிய விவரங்களைத் தோ்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, போடியில் ஓ. பன்னீர்செல்வம், வி. டி. நாராயணசாமி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

தற்போது திமுகவில் இணைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீா்செல்வம், 2026 தோ்தலில் இந்தத் தொகுதியில் 4-ஆவது முறையாக போட்டியிடுகிறாா். இதே தொகுதியில் முதல்முறையாக திமுக வேட்பாளராக அவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் சே. பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளராக பாண்டிக்குமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக சீ. கலைஅரசு ஆகியோரும் வேட்பாளர்கள் சிலர் சுயேச்சைகளாகவும் போட்டியிடுகின்றனர்.

summary

TN Election 2026 Bodinayakkanur constituency accepted nominations list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.