முகப்பு
தமிழ்நாடு

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர் பற்றிய தகவல்கள்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் - EC
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவே சுவாரஸ்யமாக இருந்த நிலையில், மேலும் பல சுவாரஸ்யங்களும் இடம்பெற்றிருந்தன.

அதாவது 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 1000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 10 பேர் வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள்.

முதலிடத்தில் இருப்பது 1 வாக்கு வித்தியாசம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்று அரசியல் கட்சிகள் சொல்லும்போது அதன் முக்கியத்துவம் புரிந்திருக்காது. ஆனால், திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது நிச்சயம் புரிந்திருக்கும் அதன் வலிமை.

Advertisement

அடுத்து, வேப்பனஹள்ளியில் திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார். இவர் அதிமுக வேட்பாளரை விட 138 வாக்குகள்தான் கூடுதலாக பெற்றிருந்தார்.

கன்னியாகுமரியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் திமுக வேட்பாளர் மகேஷை விட 214 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.

போளூர் தொகுதியில் தவெக வேட்பாளர் அபிஷேக், தேமுதிக வேட்பாளர் சரவணைனை 227 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருக்கோவிலூர் அதிமுக வேட்பாளர் 285 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பரமத்தி - வேலுர அதிமுக வேட்பாளர் 308 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுபோல, பழனி தொகுதியில் 693 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரும் உதகையில் பாஜக வேட்பாளர் 976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

விக்ரவாண்டியில் பாமக 910 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

திண்டிவனத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னிஅரசு 734 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

கோவில்பட்டியில் 843 வாக்கள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கருணாநிதியும், குளித்தலையில் 579 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரனும் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு இரண்டாம் இடத்தில் தவெக வேட்பாளர் தோல்வியை தழுவினார்.

summary

Information about the 10 people who won by the smallest margin of votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.