FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தாராபுரம்! 958 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை!

தாராபுரம் இத்தேர்தலில், 4 ஆவது சுற்றில் அதிமுக 958 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.

9 அக்டோபர் 2026, 10:41 am IST
அதிமுக வேட்பாளா் பானுமதி
பகிர்:

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்திலும் அ.தி.மு.க முன்னிலையில் உள்ளது.

2ஆம் சுற்றில் த.வெ.க வேட்பாளரை பின்னுக்கு தள்ளி அ.தி.மு.க. வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த நிலையில், அதே நிலவரம் 4வது சுற்றிலும் நீடிக்கிறது.

3ஆம் சுற்று இறுதியில் தாராபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி - 10,773 வாக்குகளும் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 9,815 வாக்குகளும் பெற்றிருந்தார். நான்காம் சுற்று இறுதியில் 958 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

Advertisement

Advertisement

2ஆம் சுற்று இறுதியில் தாராபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி - 6,506 வாக்குகளும் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 6,456 வாக்குகளும் பெற்றிருந்தார். தி.மு.க. வேட்பாளர் 4,995 வாக்குகள் பெற்றிருந்தார்.

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் இருந்தார். பிறகு முன்னிலை நிலவரம் மாறியிருக்கிறது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட முதல் சுற்றிலிருந்தே தொடர்ந்து சத்யபாமா முன்னிலையில் இருந்த நிலையில் 2ஆம் சுற்றில் போக்கு மாறியது.

மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகங் எண்ணப்பட்டு உடனுக்குடன் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

10.40 மணி நிலவரப்படி, தாராபுரத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது. தவெக இரண்டாம் இடத்தில் உள்ளது.

இடைத்தேர்தலில் 1,79,337 வாக்குகள் பதிவான நிலையில் கடந்த பொதுத் தேர்தலை விட குறைவான வாக்குகள் பதிவானதாக விமர்சனங்கள் எழுந்தன. தாராபுரம் இடைத்தேர்தலில் 80.30 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

தாராபுரம் இடைத்தேர்தல் 2வது சுற்று

1.சத்தியபாமா (த.வெ.க.) - 4981

2. பானுமதி (அதிமுக) - 5573

3. சுகன்யா (திமுக) - 4016

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 352

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 107

வாக்கு வித்தியாசம்.592 வாக்குகள் அதிமுக முன்னிலை

தாராபுரம் இடைத்தேர்தல் முதல் சுற்று

1. சத்தியபாமா (த.வெ.க.) - 2634

2. பானுமதி (அதிமுக) - 2639

3. சுகன்யா (திமுக) - 2019

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 168

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 70

வாக்கு வித்தியாசம்.5 வாக்குகள் அதிமுக முன்னிலை

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments