முகப்பு
தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக அபார வெற்றி - நேரலை உடனுக்குடன்!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து...

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக அபார வெற்றி - நேரலை உடனுக்குடன்!
முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.
பகிர்:
Updated On : 9 அக்டோபர் 2026, 7:47 am

தாராபுரம் இடைத்தேர்தல்: வெற்றி யாருக்கு?

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சாா்பில் தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமா, தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இந்தத் தொகுதியில், கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சாா்பில் சத்தியபாமா, திமுக சாா்பில் சுகன்யா, அதிமுக சாா்பில் க.பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் லட்சுமணன் உள்ளிட்டோா் களத்தில் இருந்தனா்.

Updated On : 9 அக்டோபர் 2026, 7:47 am

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, 23 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.

Updated On : 9 அக்டோபர் 2026, 8:16 am

தபால் வாக்குகளில் தவெக முன்னிலை!

தவெகவின் சத்தியபாமா 72 வாக்குகளும், திமுகவின் சுகன்யா 68 வாக்குகளும், அதிமுகவின் பானுமதி 56 வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர்.

Updated On : 9 அக்டோபர் 2026, 9:43 am

தாராபுரம் இடைத்தேர்தல்! 2ஆம் சுற்றில் முன்னிலைக்கு வந்த அதிமுக!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் அ.தி.மு.க முன்னிலைக்கு வந்துள்ளது.

Updated On : 9 அக்டோபர் 2026, 9:47 am

தாராபுரம் இடைத்தேர்தல் முதல் சுற்று 1.

சத்தியபாமா (த.வெ.க.) - 2634 2. பானுமதி (அதிமுக) - 2639 3. சுகன்யா (திமுக) - 2019 4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 168 5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 70 வாக்கு வித்தியாசம்.5 வாக்குகள் அதிமுக முன்னிலை

Updated On : 9 அக்டோபர் 2026, 9:47 am

தாராபுரம் இடைத்தேர்தல் 2வது சுற்று

1.சத்தியபாமா (த.வெ.க.) - 4981

2. பானுமதி (அதிமுக) - 5573

3. சுகன்யா (திமுக) - 4016

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 352

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 107

வாக்கு வித்தியாசம்.592 வாக்குகள் அதிமுக முன்னிலை

Updated On : 9 அக்டோபர் 2026, 10:28 am

தாராபுரம் இடைத்தேர்தல்! 810 வாக்குகள் வித்தியாசம்

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

Updated On : 9 அக்டோபர் 2026, 10:50 am

தாராபுரம் இடைத்தேர்தல்! 958 வாக்குகள் வித்தியாசம்

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

Updated On : 9 அக்டோபர் 2026, 10:50 am

தாராபுரம் மீண்டும் மாறிய நிலவரம்! சத்யபாமா முன்னிலை!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது திடீரென நிலவரம் மாறியது. தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைக்கு வந்தார்.

Updated On : 9 அக்டோபர் 2026, 10:57 am

தாராபுரம் இடைத்தேர்தல் 5 சுற்று

1.சத்தியபாமா (த.வெ.க.) - 13213

2. பானுமதி (அதிமுக) - 12,489

3. சுகன்யா (திமுக) - 11,554

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 898

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 260

வாக்கு வித்தியாசம் 724 வாக்குகள் த.வெ.க. முன்னிலை

Updated On : 9 அக்டோபர் 2026, 11:02 am

தவெக முன்னிலை

தாராபுரம் இடைதேர்தல் 6ஆவது சுற்றில் தவெக1394 வாக்குகள் முன்னிலை

Updated On : 9 அக்டோபர் 2026, 11:48 am

தாராபுரம் இடைதேர்தல் 9ஆவது சுற்றின் முடிவில் தவெக வேட்பாளர் சத்யபாமா 2112 வாக்குகள் வித்தியாசத்தில்  முன்னிலையில் உள்ளார்.

Updated On : 9 அக்டோபர் 2026, 12:03 pm

தாராபுரம் இடைத்தேர்தல் 10வது சுற்று

1.சத்தியபாமா (த.வெ.க.) - 27,649

2. பானுமதி (அதிமுக) - 23,521

3. சுகன்யா (திமுக) - 22,503

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 2,156

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 509

வாக்கு வித்தியாசம்.4,128 வாக்குகள் த.வெ.க முன்னிலை

Updated On : 9 அக்டோபர் 2026, 1:36 pm

தாராபுரத்தில் தவெக முன்னிலை! 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியபாமா முன்னிலை...

Updated On : 9 அக்டோபர் 2026, 5:37 pm

விஜய்தான் இனி தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்: அமைச்சர் செங்கோட்டையன்

விஜய்தான் இனி தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக இருப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சத்தியபாமா | சுகன்யா | பானுமதி | கார்த்திகா
Updated On : 9 அக்டோபர் 2026, 5:49 pm

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக அபார வெற்றி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.