FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுராந்தகம், தாராபுரம்: தபால் வாக்குகளில் தவெக முன்னிலை

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து...

9 அக்டோபர் 2026, 8:18 am IST
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகளில் தவெக முன்னிலை வகிக்கிறது.

இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று (அக். 9) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

செங்கல்படு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அக். 6 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவும் இவ்விரு தொகுதிகளின் வாக்குச் சாவடி மையங்களிலும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் மரகதம் குமரவேல் 32 தபால் வாக்குகளும், திமுகவின் பரந்தாமன் 27 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 13 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் தவெகவின் சத்தியபாமா 54 வாக்குகளும், திமுகவின் சுகன்யா 48 வாக்குகளும், அதிமுகவின் பானுமதி 23 வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments