மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது குறித்து...
இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று (அக். 9) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
செங்கல்படு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அக். 6 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவும் இவ்விரு தொகுதிகளின் வாக்குச் சாவடி மையங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள், செங்கல்பட்டு ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டு ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேசைகளும், மின்னணு வாக்குகளுக்கு 14 மேசைகளும் அமைக்கப்பட்டு, 20 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இதேபோல், தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள், திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, 23 சுற்றுகளாக எண்ணிக்கை நடைபெறுகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகள் எண்ணப்படும்.
காலை 10 மணியளவிலேயே முன்னணி நிலவரம் தெரிய வரும் என்றும், 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Maduranthakam and Dharapuram by-elections: Vote counting has begun
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.