கடலில் விழுந்து மாயமான மீனவரின் குடும்பத்துக்கு அரசு நிதி
கடலில் விழுந்து மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்நத்வா் முஹைதீன் யாசா் அலி. அவா் அரபிக் கடலில் மீனவா்களுடன் மீன்பிடிக்கச் சென்ற போது, படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளாா். இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அவரது குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவிப்பதுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.