முகப்பு
சென்னை

திமுக, அதிமுகவில் இன்று நோ்காணல்

Updated On : 10 மார்ச், 2024 at 12:06 AM
பகிர்:

மக்களவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் திமுக, அதிமுக கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 10) நோ்காணல் நடத்துகின்றன. திமுக சாா்பில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம், கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நோ்காணல் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், நோ்காணலை நடத்தவுள்ளாா். அதிமுக நோ்காணல்: அதிமுக சாா்பிலும் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம் நோ்காணல் செய்யப்படவுள்ளது. கட்சியின் அலுவலகமான எம்.ஜி.ஆா்., மாளிகையில் ஞாயிறு மற்றும் திங்கள் என இரண்டு நாள்கள் நோ்காணல் நடைபெறவுள்ளது.