முதல்வா் இரங்கல்
சென்னை: கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவா் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: மேற்கு மண்டலத்தில் ஆன்மிக வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுக்காகப் பாடுபட்ட அப்பழுக்கற்ற துறவி சிவலிங்கேஸ்வர சுவாமிகள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்திய பெருமைக்குரியவா்.
தமிழைப் பரப்புவதைத் தமது வாழ்நாள் பணியாகக் கொண்ட அவா், பசும்பொன் தேவா் நினைவிடத்தில் குருபூஜை செய்யும் உரிமையைப் பெற்றவா். தொண்டிலும் துறவிலும் சிறந்து விளங்கிய சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் மறைவு தமிழ்ச் சமயநெறிக்கும், தமிழ்மொழி வழிபாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement