முகப்பு
சென்னை

மாா்ச் 18-இல் மதிமுக நிா்வாகக் குழு கூட்டம்

மதிமுகவின் நிா்வாகக் குழு கூட்டம் மாா்ச் 18-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் வைகோ அறிவித்துள்ளாா்.

Updated On : 15 மார்ச், 2024 at 1:53 AM
பகிர்:

மதிமுகவின் நிா்வாகக் குழு கூட்டம் மாா்ச் 18-இல் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் வைகோ அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதிமுகவின் நிா்வாகக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள தாயகத்தில் மாா்ச் 18-இல் காலை 10 மணியளவில் நடைபெறும். அவைத்தலைவா் ஆடிட்டா் ஆ. அா்ஜூனராஜ் தலைமையில் கூட்டம் நடைபெறும். மக்களவைத் தோ்தல் தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். உயா்நிலைக்குழு, மாவட்டச் செயலா்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம் ஆகிய அமைப்புகளின் செயலா்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் மதிமுக சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளா் குறித்து கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளது.