முகப்பு
சென்னை

பம்பரம் சின்னம்: தலைமைத் தோ்தல் அதிகாரியுடன் வைகோ சந்திப்பு

Updated On : 15 மார்ச், 2024 at 11:13 PM
பகிர்:

பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தமிழக தோ்தல் துறையிடம் மதிமுக வழங்கியது. இதற்காக, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை, சென்னையில் மதிமுக பொதுச் செயலா் வைகோ, வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். முன்னதாக, மக்களவைத் தோ்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக அளித்திருந்த விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் நகலை தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் வைகோ வழங்கினாா்.