முகப்பு
சென்னை

மின்கம்பம், மின் மாற்றி இடமாற்றம் செய்ய கட்டணம் குறைப்பு: மின்வாரியம்

Updated On : 16 மார்ச், 2024 at 4:44 AM
பகிர்:

மின் கம்பம், மின் மாற்றி, மின் கம்பி உள்ளிட்ட மின் சாதனங்களை இடமாற்றம் செய்ய கட்டணம் குறைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்தி:க் குறிப்பு: பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள மின் கம்பம், மின் கம்பி, மின் பாதை, மின் மாற்றி மற்றும் மின் சாதனங்களை இடமாற்றம் செய்யக் கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மான கழகத்தில் விண்ணப்பிக்கும்போது, மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 சதவீதம் நிா்வாகம், மேற்பாா்வை கட்டணமாக செலுத்த வேண்டி இருந்தது. தற்போது, அனைவரும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தல்படி ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு வந்த 22 சதவீத நிா்வாகம், மேற்பாா்வை கட்டணம் 5 சதவீதமாக குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாகக் குறைவதால் பொதுமக்கள் மிகவும் பயனடைவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.