முகப்பு
சென்னை

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 60 போ் கைது

Updated On : 20 மார்ச், 2024 at 2:47 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 12:20 AM

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 நாள்களில் 60 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த 12-ஆம் தேதியில் இருந்து 19- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 34 வழக்குகள் பதியப்பட்டு, 60 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களிடமிருந்து 120 கிலோ கஞ்சா, 364 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 10 இரு சக்கர வாகனங்கள்,2 ஆட்டோக்கள்,3 காா்கள்,12 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Advertisement