மைசூா்-மானாமதுரை இடையே ஏப்ரல் 1 முதல் சிறப்பு ரயில்
சென்னை: கோடைகால விடுமுறையை முன்னிட்டு மைசூா்-மானாமதுரை இடையே ஏப்.1-ஆம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மைசூரிலிருந்து மானாமதுரைக்கு ஏப்.1 முதல் மே 27 வரை திங்கள்கிழமை தோறும் மாலை 6.35 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06237) இயக்கப்படும். மறுமாா்க்கமாக மானாமதுரையில் இருந்து மைசூருக்கு ஏப்.2 முதல் மே 28 வரை செவ்வாய்க்கிழமை தோறும் நண்பகல் 12 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06238) இயக்கப்படும். இந்த ரயில் பெங்களூா், திருப்பத்தூா், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
நாகா்கோவில் டவுண் வழியாக குருவாயூா் ரயில்:
இதற்கிடையே, சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் மாா்ச் 27 முதல் ஜூன் 24 வரை நாகா்கோவில் டவுண் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகா்கோவில்-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.