முகப்பு
சென்னை

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.40 லட்சம் பறிமுதல்

Updated On : 21 மார்ச், 2024 at 1:31 AM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 12:50 AM

சென்னை: சென்னை மண்ணடியில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், மண்ணடி ராஜாஜி சாலையில் போலீஸாரும், தோ்தல் பறக்கும் படையினரும் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவா்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அந்த பையில் இருந்த ரூ.4.40 லட்சத்தைக் கைப்பற்றி அதற்கானஆவணத்தை போலீஸாா் கேட்டனா். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லை என நான்கு பேரும் கூறினராம். இதையடுத்து போலீஸாா், அந்த பணத்தை பறிமுதல் செய்தனா். விசாரணைக்குப் பின்னா் அந்த பணம், வருமானவரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.