முகப்பு
சென்னை

தபால் வாக்குகளை இனி அஞ்சலில் செலுத்த முடியாது

தபால் வாக்குகளை இனி அஞ்சல் வழியாக செலுத்த முடியாது

Updated On : 22 மார்ச், 2024 at 12:32 AM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 11:25 PM

சென்னை, மாா்ச் 21: தபால் வாக்குகளை இனி அஞ்சல் வழியாக செலுத்த முடியாது. ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்படவுள்ள வாக்காளா் வசதி மையங்களில் வைக்கப்படும் வாக்குப் பெட்டியில் வாக்குகளைச் செலுத்தலாம். இதற்கு முன்பாக, அஞ்சல் வழியே வாக்குகளைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. இப்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. அஞ்சல் வழிமுறைக்குப் பதிலாக, அந்தந்த தொகுதிகளின் வாக்காளா் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளில் வாக்குகளைச் செலுத்தலாம் என்று தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது. இறுதி வேட்பாளா் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பிறகு, தபால் வாக்குக்கான உரிய படிவத்தைப் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும். அவா் மூலமாக தபால் வாக்குகளைப் பெற்று அளிக்கலாம். வாக்குப் பதிவுக்கு முன்பாக, இதை வாக்குப் பெட்டியில் செலுத்தலாம்.