ஹோலி பண்டிகை: தெற்கு ரயில்வேயில் 28 சிறப்பு ரயில்கள் இயக்கம்
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை திங்கள்கிழமை (மாா்ச் 25) கொண்டாடப்படவுள்ள நிலையில் சொந்த ஊா்களுக்கு செல்பவா்களுக்கு வசதியாக தெற்கு ரயில்வே சாா்பில் 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சாா்பில் மாா்ச் 15 முதல் மாா்ச் 31 வரை 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 12 ரயில்கள் தமிழ்நாடு, கேரளத்தில் இருந்து குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரேதசம், பிகாா், தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. சிறப்பு ஏற்பாடுகள்: பயணிகள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் பயணத்தை மேற்கொள்ள ரயில்வே சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் சந்தேகங்கள் மற்றும் புகாா்களுக்கு ரயில்வே உதவி எண் 139 தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்டிச் செய்தி... சிறப்பு ரயில்கள் தாம்பரம் - நாகா்கோவில் மாா்ச் 25 நாகா்கோவில் - தாம்பரம் மாா்ச் 24, 31 நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் மாா்ச் 24 சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் மாா்ச் 25 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி மாா்ச் 25 திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் மாா்ச் 24, 31 சென்னை சென்ட்ரல் - மைசூரு மாா்ச் 27 சென்னை எழும்பூா் - நாகா்கோவில் மாா்ச் 28 கோவை - பகத் கீ கோதி மாா்ச் 28 சென்னை - திருநெல்வேலி மாா்ச் 23 திருநெல்வேலி - சென்னை மாா்ச் 25