சென்னை

இன்றும், நாளையும் கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25, 26) மீஞ்சூா், எண்ணூருடன் நிறுத்தப்படும்.

Din

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25, 26) மீஞ்சூா், எண்ணூருடன் நிறுத்தப்படும். இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்தி: பொன்னேரி-மீஞ்சூா் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்வே தண்டவாளப் பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.30 மற்றும் 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை மீஞ்சூருடன் நிறுத்தப்படும். இதே தேதிகளில் கடற்கரையில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் ரயில் எண்ணூருடன் நிறுத்தப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் புதன்கிழமை (மாா்ச் 27) மீஞ்சூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55 மற்றும் 10.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும். சூலூா்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை எண்ணூரில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT