முகப்பு
சென்னை

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் பறிமுதல்

Updated On : 28 மார்ச், 2024 at 1:31 AM
பகிர்:
Updated On : 28 மார்ச், 2024 at 1:05 AM

சென்னை கே.கே.நகரில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, நெசப்பாக்கம் கே.கே. நகா் சந்திப்பில் புதன்கிழமை நண்பகல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சோ்ந்த ராஜா (35) என்பரை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அவா் வைத்திருந்தத ரூ. 7 லட்சத்துக்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா்.