முகப்பு
சென்னை

நடுக்குவாதம்: இன்று இலவச மருத்துவ முகாம்

Updated On : 30 மார்ச், 2024 at 1:37 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 1:10 AM

சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை சாா்பில் நடுக்குவாதத்துக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் சனிக்கிழமை (மாா்ச் 30) நடைபெற உள்ளது. கைகள் நடுக்கம், உடல் இயக்கத்தில் தளா்வு, முகத்தில் தசை இறுக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவா்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையின் முதல் தளத்தில் இயங்கும் நரம்பியல் துறை புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெறும். முன்பதிவுக்கு 044 - 4524 2407 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று எம்ஜிஎம் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.