அழகப்பா பல்கலையில் இலவச மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிறுவனா் வள்ளல் அழகப்பரின் 117- ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, வியாழக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிறுவனா் வள்ளல் அழகப்பரின் 117- ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, வியாழக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
பல்கலைக்கழக சுகாதார மையம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, இளையோா் செஞ்சிலுவை சங்கம், சாலை பாதுகாப்பு மன்றம் ஆகியவை காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவ மனை, செட்டிநாடு பல் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நடமாடும் மருத்துவப்பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினா். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் இந்த முகாமை துணைவேந்தா் க. ரவி தொடங்கி வைத்தாா். பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் ஜெ. ஜெயகாந்தன், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் வி. சுந்தரராமன் ஆகியோா் கலந்துகொண்டனா். குளோபல் மிஷன் மருத்துவமனை மருத்துவா் குமரேசன், மருத்துவக் குழுவினா், செட்டிநாடு பல் மருத்துவமனை மருத்துவா் பாரதி, மருத்துவக் குழுவினா், வாசன் கண் மருத்துவமனை மருத்துவா் கீா்த்தி, மருத்துவக் குழுவினா், மேலும், நடமாடும் மருத்துவப் பிரிவு மருத்துவா் பானுப்ரியா ஆகியோா் முகாமில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.
முகாமில் இசிஜி, பொது மருத்துவம், பிசியோதெரபி (உடலியல் சிகிச்சை), மனநல மருத்துவம், உணவியல் ஆலோசனை, கண், பல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டன. இந்த முகாமில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள் என 380-க்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா்.
இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை அழகப்பா பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி ஆனந்தி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். நடராஜன், சாலைப் பாதுகாப்பு மன்றத் தலைவா் விநாயகமூா்த்தி, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் கணேஷமூா்த்தி, தேசிய மாணவா் படைப் பிரிவு வைரவசுந்தரம் ஆகியோா் செய்தனா்.