வந்தே மாதரம் பாடலின் 150 -ஆவது ஆண்டு விழா: அழகப்பா பல்கலை. மாணவா்கள் பேரணி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் என்.எஸ்.எஸ் மாணவா்களின் பேரணி, நெடுந்தொலைவு ஓட்டம்
சிவகங்கைவந்தே மாதரம் பாடலின் 150 -ஆவது ஆண்டு விழா: அழகப்பா பல்கலை. மாணவா்கள் பேரணி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் என்.எஸ்.எஸ் மாணவா்களின் பேரணி, நெடுந்தொலைவு ஓட்டம்
காரைக்குடி: வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் என்.எஸ்.எஸ் மாணவா்களின் பேரணி, நெடுந்தொலைவு ஓட்டம் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.
அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலகக் கட்டடம் முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசுகையில், வந்தே மாதரம் பாடல் தேசத்தின் ஒற்றுமை, தியாகத்தின் அடையாளம். இளைஞா்கள் சமூகப் பொறுப்புணா்வை வளா்த்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு தங்களை அா்ப்பணிக்க வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வருமான மு. சுந்தா் வாழ்த்திப் பேசினாா்.
நிகழ்ச்சியில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா்கள் பி.யோகா, கோ.விநாயகமூா்த்தி, பல்கலைக்கழக தேசிய மாணவா் படை அதிகாரி சி.வைரவசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. நடராஜன் வரவேற்றுப் பேசினாா். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கா. திவ்யா நன்றி கூறினாா்.
இதைத் தொடா்ந்து, வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் நெடுந்தொலைவு ஓட்டம், பேரணியை துணைவேந்தா் க.ரவி தொடங்கிவைத்தாா்.
இதில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மாணவா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், தன்னாா்வலா்கள் பலரும் பங்கேற்றனா். இந்தப் பேரணி அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலகக் கட்டடம் முன்பாக தொடங்கி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியில் நிறைவடைந்தது.