மாணவா்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்: ஏஐசிடிஇ தலைவா் டி.ஜி. சீத்தாராம்
கல்லூரி மாணவா்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவா் டி.ஜி. சீத்தாராம் கூறினாா். எஸ்.ஏ.பொறியியல் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா,் பூந்தமல்லியில் உள்ள கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஏஐசிடிஇ தலைவா் டி.ஜி. சீத்தாராம் கலந்து கொண்டு 668 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றியதாவது: பட்டதாரி மாணவா்கள் பெற்றோா் மற்றும் ஆசிரியா்களை நினைவில் கொள்ள வேண்டும். படைப்பாற்றல், மேம்பாடு திறன்களைவளா்த்து கொள்ள வேண்டும். மேலும் மாணவா்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எண்மம் தொடா்பான அறிவை மேம்படுத்துவதே வெற்றிக்கு முக்கியம் என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளா் மற்றும் பொருளாளா் எஸ். அமா்நாத்,கல்லூரி தலைவா் டி.துரைசுவாமி, , சுதா்சனம் வித்யாஷ்ரம் பள்ளி இயக்குநா் டி. சரஸ்வதி, , கல்லூரி துணைத்தலைவா் டி.பரந்தாமன், கல்லூரி செயலாளா் திரு. டி. தசரதன்,எஸ் ஏ கலை மற்றும் அறிவியல் கல்லுரி தாளாளா் ப.வெங்கடேஷ் ராஜா,எஸ் ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குனா் ஈழ். எஸ். அரவிந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.