ஐஐடிஎம்-ல் ஆராய்ச்சி ஆய்வாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் வெப்ப மண்டல வானிலையியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி ஆய்வாளர் பணி குறித்து...
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் புணேயில் செயல்பட்டு வரும் ஒரு தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான இந்திய வெப்பமண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐடிஎம்) வானிலை மற்றும் காலநிலை அறிவியலின் பல்வேறு பரிமாணங்களில் அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் முழுமையாக அர்ப்பணித்துள்ளது. வானிலை மற்றும் காலநிலை முன்னறிவிப்புத் திறனை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, முதுகலை மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதும், வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல்துறைகளில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 15 ஆராய்ச்சி ஆய்வாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.PER/03/2026
Advertisement
Advertisement
பணி: Research Fellow
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 27.4.2026 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.37,000
தகுதி: Physics, Atmospheric Sciences, Meteorology, Climate Science, Chemistry, Physical Chemistry, Inorganic Chemistry, Oceanic Sciences போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கேட், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிஎஸ்ஐஆர், யுசிஜி வழிகாட்டுதல்களின்படி, முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tropmet.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Indian Institute of Tropical Meteorology (IITM), Pune is an Autonomous Research Organization under Ministry of Earth Sciences
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.