மெட்ராஸ் தொழில்நுட்பக் கழக கல்லூரியில் 'ப்ராஜெக்ட் பெல்லோஷிப்' பணி
மெட்ராஸ் தொழில்நுட்பக் கழக கல்லூரியில் ப்ராஜெக்ட் பெல்லோஷிப் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்...
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கழக கல்லூரியில் கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Project Fellow (CRS-Junior)
காலியிடம் : 1
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.18,200
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உற்பத்தி, ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி முறை, ஆட்டோமொபைல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் மற்றும் எம்இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு பற்றிய விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பின்னர் அதன் நகலை பிடிஎப் வடிவில் மாற்றி mugendiran.v@ mitindia.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dr. Mugendiran V. (Principal Investigator), Assistant Professor, Department of Production Technology, Madras Institute of Technology Campus, Anna University.Chromepet, Chennai - 600 044
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.7.2026
Recruitment for the Project Fellow...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.