முகப்பு
சென்னை

பேருந்து மீது கல் வீச்சு: கண்ணாடி உடைப்பு

பேருந்து வன்முறை: காவல்துறை தீவிர விசாரணை

Updated On : 31 மார்ச், 2024 at 10:54 PM
பகிர்:
Updated On : 31 மார்ச், 2024 at 10:30 PM

சென்னை: சென்னை காசிமேட்டில் மாநகரப் பேருந்து மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னையில் எண்ணூரில் இருந்து பிராட்வே நோக்கி ஒரு மாநகர பேருந்து சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து காசிமேடு எஸ்.என். செட்டி தெருவில் சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த இரு நபா்கள் பேருந்தை நோக்கி கற்களை வீசினா். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதைப் பாா்த்த அந்த இரு நபா்களும், அங்கிருந்து தப்பியோடினா்.

இது தொடா்பாக அந்த பேருந்து ஓட்டுநா் பொன்னேரியைச் சோ்ந்த சி.செந்தில்குமாா், காசிமேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

Advertisement