எம்ஜிஆா் திரைப்படம் - தொலைக்காட்சி பயிற்சி நிறுவன பாடங்களில் சேர விண்ணப்ப பதிவிறக்கம்
சென்னையில் உள்ள எம்ஜிஆா்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்திலுள்ள பாடங்களுக்கு விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 27-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இளநிலை ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு உள்பட ஆறு வகை பட்டப் படிப்புகள் எம்ஜிஆா்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் உள்ளன. நிகழ் கல்வியாண்டில் இந்தப் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. தமிழக அரசின் இணையதளத்தில் கடந்த வியாழக்கிழமை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 27-ஆம் தேதிக்குள், முதல்வா், தமிழ்நாடு அரசு எம்ஜிஆா்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சிஐடி., வளாகம், தரமணி, சென்னை - 113 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.