தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி 4 வாரங்களுக்கு நிறுத்தம்! - மத்திய அரசு அறிவிப்பு! ஏன்?
இந்தியத் தொலைக்காட்சி சேனலுகளுக்கான டிஆர்பி மதிப்பீட்டு புள்ளிகள் நிறுத்தப்படுவது குறித்து...
இந்தியத் தொலைக்காட்சி சேனலுகளுக்கான மதிப்பீட்டு புள்ளிகளை (டிஆர்பி) 4 வாரங்களுக்கு மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.
இந்தியத் தொலைக்காட்சி சேனல்களுக்கான மதிப்பீடுகளை (டிஆர்பி) 4 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் குறித்து, சில தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பி மதிப்பீடுகளுக்காகத் தேவையற்ற பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகள் மற்றும் ஊடகத் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் இடையில் பதற்றமான சூழல் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், மக்களின் நலனுக்காக, தொலைக்காட்சி சேனல்களின் தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை (டிஆர்பி) 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
The central government has suspended the TRP for television channels for 4 weeks.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.