குவைத் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் பலி! மத்திய அரசு கண்டனம்!
ஈரானிய படைகளின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு கண்டனம்...
குவைத் மீதான ஈரானிய படைகளின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக குவைத்திலுள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தின.
குவைத்தின் சர்வதேச விமான நிலையம் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், குவைத் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று (ஜூன் 3) கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கும், ஏராளமான இந்தியர்கள் படுகாயமடைந்ததற்கும் காரணமான குவைத் விமான நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். மேற்காசியாவில் நடைபெறும் மோதலில், மக்கள் மீதும் மக்கள் கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்துகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தொடங்கியது முதல் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலில் இதுவரை 10 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Central Government has condemned the killing of an Indian national in an attack by Iranian forces on Kuwait.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.