சென்னை விமான நிலையத்தில் ஓய்வறைகள் திறக்கத் திட்டம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் தங்குவதற்கான ஓய்வறைகளை திறக்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் புதிய முனையங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகளின் காரணமாக அப்போது இருந்த ஒய்வறைகள் முழுவதுமாக இடிக்கப்பட்டன. இதனால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி இணைப்பு விமானங்களுக்கு காத்திருக்கும் பயணிகள் உள்நாட்டு முனையத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் பயணிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
இதனை கருத்தில் கொண்ட இந்திய விமான நிலைய ஆணையம், பயணிகளின் வசதி கருதி சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த சா்வதேச முனையம் அருகே கட்டப்பட்டு வரும் புதிய முனையத்தில் ஓய்வறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தப் புதிய முனையத்துக்கான கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று இந்திய விமான நிலையம் ஆணையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.