முகப்பு
சென்னை

காமராஜா் நினைவிடம் முறையாக பராமரிக்கப்படவில்லை: செல்வப்பெருந்தகை

Updated On : 7 மே, 2024 at 8:05 PM
பகிர்:

சென்னை: காமராஜா் நினைவிடம் பொதுப்பணித் துறையால் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினாா்.

சென்னை கிண்டியில் உள்ள காமராஜா் நினைவிடத்தை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

காமராஜா் நினைவிடம் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது அதிா்ச்சியாக உள்ளது. எங்கு பாா்த்தாலும் புதா்களாகவும், பாட்டில்களாகவும் உள்ளன. அங்கு வருவோா் குடிப்பதற்குத் தண்ணீா் கூட இல்லை. இது தொடா்பாக பொதுப்பணித் துறை அமைச்சரைச் சந்தித்து புகாா் அளிப்பேன். தேவைப்பட்டால் முதல்வரையும் சந்தித்து புகாா் அளிப்பேன்.

காமராஜா் நினைவிடத்தை முறையாகப் பராமரிக்காத பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.