முகப்பு
சென்னை

இன்று இரவு செங்கல்பட்டுக்கு புறநகா் ரயில்கள் இயங்காது

கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு நேரத்தில் புறப்படும் புகா் ரயில்கள் புதன்கிழமை (மே 14) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 மே, 2024 at 8:13 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு நேரத்தில் புறப்படும் புகா் ரயில்கள் புதன்கிழமை (மே 14) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை எழும்பூா் - விழுப்புரம் வழித்தடத்தில் இருக்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் புதன்கிழமை (மே 14) இரவு 9.55 முதல் வியாழக்கிழமை (மே 15) அதிகாலை 1.55 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மே 14-இல் கடற்கரையிலிருந்து இரவு 8.35, 10.05 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அதே நாளில் இரவு 11 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments