முகப்பு
சென்னை

கோடை காலத்துக்குள் நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஜி.கே.வாசன்

Updated On : 14 மே, 2024 at 9:21 PM
தமாகா தலைவா் ஜி.கே.வாசன் (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை: கோடை காலம் முடிவடைவதற்குள் நீா்நிலைகளைத் தூா்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விவசாயத்துக்குத் தேவையான தண்ணீா் கடைமடைகளுக்கு எளிதாகச் செல்லும் வகையில் வாய்க்கால்களை தூா்வாரும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும். கோடைக் காலங்களில் ஏரி, குளங்களையும் தூா்வாரி தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அளிக்கும் மழை நீரைச் சேமிக்கும் திட்டம் காமராஜா் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

இனிமேலும், காலதாமதம் செய்யாமல் கோடை காலம் முடிவதற்குள் மழைநீா் வடிகால் பணியையும், போக்குவரத்து சாலைகளை செப்பனிடும் பணிகளையும் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.