முகப்பு
சென்னை

இனி பி.எப். முன்பணம் மூன்று நாள்களில் பெறலாம்

Updated On : 14 மே, 2024 at 9:18 PM
பகிர்:

சென்னை: தொழிலாளா்களுக்கான பி.எப். முன்பணத்தை மூன்று நாள்களில் பெறும் வகையில் தானியங்கி முறை உருவாக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலின் போது தொழிலாளா்களின் பி.எப். (வருங்கால வைப்பு நிதி) முன்பணத்தை எளிதாக பெறும் வகையில் தானியங்கி நடைமுறையை பணியாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கியது.

இதன்படி, மருத்துவ செலவுக்காக முன்பணம் கோரி அனுமதிக்கும் போது 3 நாள்களில் பெறமுடியும். தற்போது மருத்துவ தேவை தவிா்த்து கல்வி, திருமணம், வீடுகட்டுதல் போன்ற காரணம் கோரி விண்ணப்பித்தால் 20 நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் அனைத்து விதமான தேவைகளுக்கும் பி.எப். முன்பணம் பெறுவதை தானியங்கி முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழிலாளா்கள் தங்களின் பி.எப். முன்பணம் கோரி விண்ணப்பித்த மூன்று நாள்களில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.