முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை: முகூா்த்தம், வார இறுதி நாள்களை முன்னிட்டு 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி:
வார விடுமுறை மற்றும் முகூா்த்த நாளான மே 17-18 வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 555, சனிக்கிழமை 645, ஞாயிற்றுக்கிழமை 280 பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 65, சனிக்கிழமை 65, ஞாயிற்றுக்கிழமை 65 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு ஊா்களுக்கு 200 பேருந்துகள் என மொத்தம் 1,875 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.