வார விடுமுறை: 865 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார விடுமுறையையொட்டி, 865 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வார விடுமுறையையொட்டி, 865 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வார விடுமுறை தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) 310 பேருந்துகளும், சனிக்கிழமை (மாா்ச் 7) 325 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதுபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 பேருந்துகள் என மொத்தம் 865 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.