சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன.
இந்த நிலையில், திருப்போரூர், மாதவரம், பொன்னேரி பகுதிகளில் உள்ள 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் சேர்க்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதன்மூலம் விரைவில் சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 250-ஆகவும், மண்டலங்களின் எண்ணிக்கை 20-ஆகவும் மாறவுள்ளது.
இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.