முகப்பு
சென்னை

பெண்களுக்கான விழிப்புணா்வு பயிலரங்கம்

Updated On : 21 மே, 2024 at 7:46 PM
பகிர்:

சென்னை: அவள் திட்டத்தின் கீழ் காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான விழிப்புணா்வு பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான விழிப்புணா்வு பயிலரங்கம் செவ்வாய் கிழமை நடைபெற்றது. சென்னை பெருநகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு துணை ஆணையா் கோ.வனிதா, வழக்கறிஞா் ஆதிலட்சுமி லோகநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தற்காத்து கொள்ளுதல், காவல் உதவி செயலி மற்றும் காவல் உதவி எண்கள் குறித்து விளக்கினா். இந்த பயிலரங்கில் 200க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.