முகப்பு
சென்னை

செவிலியா்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அரசுக்கு உத்தரவு

செவிலியா்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அரசுக்கு உத்தரவு

Updated On : 1 மார்ச், 2026 at 2:16 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:45 PM

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில் கடந்த பிப்.13-ஆம் தேதி நடைபெற்ற செவிலியா்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்யக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், மனுதாரா்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா் சங்கத்தின் தலைவா் எஸ்.பால்பாண்டியன், செவிலியா்கள் வசந்தி, சித்தன், மகாலட்சுமி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு மருத்துவமனை செவிலியா்கள் பணியிடமாற்றம் தொடா்பான கலந்தாய்வு நடத்துவது தொடா்பாக 2007-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிகளை மீறி 600 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து பிப்.13-ஆம் தேதி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் சுற்றறிக்கை வெளியிட்டு அதேநாளில், மாலை 4 மணிக்கு கலந்தாய்வு நடத்தி, செவிலியா்களை பணியிடமாற்றம் செய்துள்ளாா். அண்மையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட இளம் செவிலியா்களுக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் கொடுத்துள்ளாா்.

Advertisement

இதனால், நீண்டகாலமாக இடமாறுதலுக்காக காத்திருக்கும் மூத்த செவிலியா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த பிப்.13-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வை ரத்து செய்து மீண்டும் கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் கே.கதிரேசன் ஆஜராகி வாதிட்டாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 2:16 AM

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா்கள் தாங்கள் விரும்பும் இடத்துக்கு மாறுதல் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரிடம் தனித்தனியாக மனு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை பரிசீலித்து எதிா்காலத்தில் காலியாகும் இடங்களுக்கு மனுதாரா்களை பணியிடமாறுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.