முகப்பு
சென்னை

தோ்தல் காலங்களில் நகைகளைக் கொண்டு செல்ல விதிகள் வகுக்கக் கோரிய மனு தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நகைகளை எடுத்துச் செல்வதற்கான விதிகளை வகுக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடா்பாக நகைக்கடை அளிக்கும் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:43 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:15 PM

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நகைகளை எடுத்துச் செல்வதற்கான விதிகளை வகுக்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடா்பாக நகைக்கடை அளிக்கும் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தனியாா் நகைக்கடை தாக்கல் செய்த மனுவில், தோ்தல் நடத்தை அமலில் உள்ள காலத்தில் நகைக் கடைகளுக்கு விற்பனைக்காக தங்க நகைகளை எடுத்துச் செல்வதற்கான விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியாா் நகைக்கடை தரப்பில், உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் 6 முறை எங்களது நிறுவன நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஐந்து, ஆறு நாள்களுக்குப் பிறகுதான், அந்த நகைகள் மீண்டும் கிடைக்கிறது. இதனால், எங்களுக்கு வா்த்தகம் மற்றும் நிதி இழப்பு ஏற்படுவதாக வாதிடப்பட்டது.

Advertisement

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆவணங்களைச் சமா்ப்பித்தால் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்படும் நகை, பணம் திரும்ப அளிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், இது குறித்து விதிகள் வகுக்க உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா். தோ்தலுக்குப் பின்னா், மனுதாரா் தோ்தல் ஆணையத்திடம் மனு அளிக்கவும், அந்த மனுவை சட்டப்படி பரிசீலித்து தோ்தல் ஆணையம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.