இன்று புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இயங்காது
சென்னை: கட்டுமானப் பணிகள் காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் புதன்கிழமை (மே 22) இயங்காது என்று சென்னை குடிநீா் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து குடிநீா் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலையில் 900 மி.மீ விட்டமுடைய கழிவுநீா் உந்து குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் புதன்கிழமை (மே 22) மாலை 4 முதல் வியாழக்கிழமை (மே 23) காலை 6 மணி வரை புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இயங்காது. எனவே ராயபுரம், திரு.வி.க நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவு
நீா் நிரம்பி வெளியேறும் நிலையில், இயந்திரங்கள் மூலம் வெளியேற்ற 81449 30905 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.