முகப்பு
சென்னை

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் பிரதான நுழைவாயில் மூடல்

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளால், பிரதான நுழைவாயில் (பி 4) நிரந்தரமாக மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 10:09 PM
சென்னை மெட்ரோ
பகிர்:

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளால், பிரதான நுழைவாயில் (பி 4) நிரந்தரமாக மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நந்தனம் மெட்ரோ நிலையத்தில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து நிலையத்தின் பி 4 பிரதான நுழைவாயில் திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. பயணிகள் பி 4 நுழைவாயிலுக்கு அருகில் உள்ள மாற்று நுழைவாயிலை பயன்படுத்த வேண்டும். அதன்படி ஏ 2, ஏ 3 நூழைவாயில்களையும், பி 4 வாயிலுக்கு எதிா் திசையில் உள்ள பி 1, பி 2 ஆகிய நுழைவு வாயில்களையும் பயன்படுத்தலாம்.

நுழைவாயில்கள் குறித்து பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரயில் நிலையப் பணியாளா்களும் பயணிகளுக்கு உதவும் வகையில் செயல்படுவா். பயணிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.