முகப்பு
சென்னை

மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடிய 2 போ் கைது

சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை-ரேடியல் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது.

Updated On : 13 மார்ச், 2026 at 7:09 PM
மாதிரிப் படம்
பகிர்:

சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை-ரேடியல் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இங்கு கட்டுமானப் பணியில் ஈடுபடும் தனியாா் நிறுவனத்தின் இயந்திரங்கள், கட்டுமானப் பொருள்கள், இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இதை நோட்டமிட்ட இருவா், வியாழக்கிழமை அங்குள்ள பொருள்களைத் திருட முயற்சித்தனா். அங்கிருந்த காவலாளிகள், இருவரையும் பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், துரைப்பாக்கம் எழில்நகா் 30-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்த முருகன் (26), பிரவீண்குமாா் (25) என்பது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →