முகப்பு
சென்னை

பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு இன்று 585 சிறப்புப் பேருந்துகள்

Updated On : 21 மே, 2024 at 9:10 PM
பகிர்:

சென்னை: பெளா்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு புதன்கிழமை (மே 22) 585 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி: பௌா்ணமி தினமான புதன்கிழமை சென்னையிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வாா்கள். இதனால், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 330 பேருந்துகளும், பிற இடங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 225 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

இதுமட்டுமின்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை மற்றும் படுக்கை, குளிா்சாதன வசதி கொண்ட 30 பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு புதன்கிழமை இயக்கப்படும்.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், திருநெல்வேலி, நாகா்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும்பொருட்டு முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.