துவரம் பருப்பு - பாமாயில்: ரேஷனில் விடுபட்டோா் வாங்க அரசு ஏற்பாடு
சென்னை: இந்த மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்காமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்கள், ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து, அறிவிப்பை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஹா்சஹாய் மீனா, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நியாயவிலைக் கடைகளில் இந்த மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவா்கள், ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்படி, மாவட்ட வழங்கல் அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும், ஒரு லிட்டா் பாமாயில் ரூ. 25-க்கும் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.