முகப்பு
சென்னை

9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 5 நவம்பர், 2024 at 7:19 PM
கனமழைக்கு வாய்ப்பு
பகிர்:

தமிழகத்தில் வியாழக்கிழமை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோன்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (நவ.6-8) வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வியாழக்கிழமை (நவ.7) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை (நவ.8) தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஒரிரு நாள்களில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்)உருவாகும் வாய்ப்புள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவையொட்டிய கடலோர பகுதியில் வியாழக்கிழமை(நவ.7) சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் படிக்க செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.