பிப். 21, 22-ல் கனமழைக்கு வாய்ப்பு!
கனமழை எச்சரிக்கை பற்றி..
பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (பிப். 19) உருவாக வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிப். 20-ல் தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Advertisement
Advertisement
பிப். 21-ல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனியில் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 22-ல் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு..
20-02-2026: வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை..
பிப். 19 முதல் 22 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
The Meteorological Department has issued a warning of heavy rain on February 21st and 22nd.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.