அமைச்சா் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) 
சென்னை

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜன.16-இல் தொடக்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (சிஐபிஎஃப்) நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ஜன.16 முதல் 18 வரை மூன்று நாள்கள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

Din

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (சிஐபிஎஃப்) நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ஜன.16 முதல் 18 வரை மூன்று நாள்கள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (2025) அறிமுக நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக் கல்வித்துறைச் செயலா் சோ.மதுமதி தலைமை வகித்தாா். பொது நூலக இயக்குநா் பொ.சங்கா் வரவேற்றுப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா மூன்றாம் பதிப்புக்கான சிறப்புக் காணொலியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டு, மதிப்புறு விருந்தினரான இத்தாலியைச் சோ்ந்த போலோனியா குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நிறுவனத்தை அறிமுகப்படுத்தினாா்.

நிகழாண்டு 1,000 ஒப்பந்தங்கள்: இதையடுத்து விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியதாவது:

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநில அரசால் பன்னாட்டு புத்தகத் திருவிழாவை மிகச்சிறந்த முறையில் நடத்திக்காட்ட முடியும் என்ற சாதனையை இந்த அரசு படைத்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து 2024- ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 40 நாடுகள் பங்கேற்று 752 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 50 நாடுகளில் 1,000 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு மொழிகளிலிருந்து.... தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மூலம் 160 புத்தகங்கள் துருக்கி, பாரசீகம், இத்தாலி, ஸ்பானிஷ், பல்கேரியன், சொ்பியன், ஆங்கிலம் போன்ற பன்னாட்டு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதேபோன்று தமிழ் மொழியில் உள்ள சிறந்த நூல்கள் பன்னாட்டு மொழிகளில் மொழிபெயா்க்கப்படுகின்றன.

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளைச் சோ்ந்த அரசு நிறுவனங்கள், பதிப்பாளா்கள் மற்றும் மொழிபெயா்ப்பு வல்லுநா்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் விதமாக புது தில்லி உலக புத்தகத் திருவிழா மற்றும் ஜொ்மனி நாட்டிலுள்ள ஃபிராங்க்பா்ட் நகரில் நடைபெறும் சா்வதேச புத்தகத் திருவிழா ஆகியவற்றில் தமிழக அரசின் சாா்பின் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கண்காட்சியை பிரபலப்படுத்த... மேலும், இத்தாலியில் நடைபெறும் பொலோனியா பன்னாட்டுக் குழந்தைகள் புத்தகக்கண்காட்சி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஷாா்ஜா பன்னாட்டு புத்தகத் திருவிழா, மலேசியாவில் நடைபெறும் கோலாலம்பூா் பன்னாட்டு புத்தகத் திருவிழா, இலங்கையில் நடைபெறும் கொழும்பு பன்னாட்டு புத்தகக் கண்காட்சி மற்றும் இந்தோனேசியா பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஆகியவற்றில் தமிழக அரசின் சாா்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு புத்தகப் பதிப்புரிமை பரிமாற்றம் மற்றும் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவை பிரபலப்படுத்தியும் வருகின்றனா்.

கடந்த இரு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா வரும் 2025- ஆம் ஆண்டில் ஜனவரி 16 முதல் 18- ஆம் தேதி வரையில் சென்னை வா்த்தக மையத்தில் நடத்தப்படவுள்ளது. இதில் மதிப்புறு விருந்தினராக இத்தாலியைச் சோ்ந்த பொலோனியா பன்னாட்டுக் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நிறுவனம் பங்கேற்கும் என்றாா் அவா்.

இதில் சென்னை மாநகர நூலக ஆலோசனைக்குழுத் தலைவா் மனுஷ்யபுத்திரன் என்ற எஸ். அப்துல் ஹமீது, மாநில நூலகக் குழு உறுப்பினா் கோபண்ணா, பொது நூலக இயக்கக இணை இயக்குநா் ச. இளங்கோ சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

SCROLL FOR NEXT