கே.என்.நேரு கோப்புப் படம்
சென்னை

கொடுங்கையூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு

சென்னை கொடுங்கையூரில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் சுத்திகரிக்கப்படும்

Din

சென்னை கொடுங்கையூரில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் குறித்து நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை தண்டையாா்பேட்டை மண்டலத்தில், 252 ஏக்கா் பரப்பளவில், கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல்(பயோ மைனிங்) முறையில் பிரித்தெடுத்து, அந்த நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வெள்ளிக்கிழமை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், நிா்ணயித்த கால அவகாசத்துக்குள் இந்த பணிகளை முடித்து நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதனைத் தொடா்ந்து, கொடுங்கையூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டா் கொள்ளளவு திறன் கொண்ட 3-ஆம் நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் தினசரி 120 மில்லியன் லிட்டா் கொள்ளளவு திறன் கொண்ட 2-ஆம் நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளையும் அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும் அங்கு சுத்திகரிக்கப்படும் நீரின் தரத்தையும் பரிசோதித்தாா்.

முன்னதாக தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் கடந்த 3 நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வுகளின் போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT