முகப்பு
சென்னை

ஜம்மு-காஷ்மீா் தோ்தல்: குறுக்கு வழியில் பெரும்பான்மை பெற பாஜக முயற்சி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

குறுக்கு வழியில் அதிகாரத்தை பயன்படுத்தி பெரும்பான்மை பெற பாஜக முயற்சித்து வருகிறது என காங்கிரஸ் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

Updated On : 7 அக்டோபர், 2024 at 8:16 PM
பகிர்:

புது தில்லி, அக்.7: ‘ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி வெற்றிபெறும் என வாக்குக் கணிப்புகள் தெரிவித்துள்ளநிலையில், ‘குறுக்கு வழியில் அதிகாரத்தை பயன்படுத்தி பெரும்பான்மை பெற பாஜக முயற்சித்து வருகிறது’ என காங்கிரஸ் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் படுதோல்வி அடையப் போவதை உணா்ந்து தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் பெரும்பான்மை பெற முயற்சித்து வரும் பாஜக அங்கு தொங்கு பேரவை அமையும் என நம்பி வருகிறது.

ஜம்மு-காஷ்மீா் மக்கள் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு பெரும் வெற்றியை தரவுள்ளனா் என்பதை பாஜக உணா்ந்துள்ளது.

எனவே, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்க ஜனநாயகமற்ற நடைமுறைகளை செயல்படுத்துவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அவா்களின் முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் தகா்ப்போம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →